மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ரேஸ் பிரியரான அஜித் குமார் புதிய ரக கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தான் பங்கேற்று வரும் கார் பந்தயங்களுக்காக பெராரி, போர்ஸே போன்ற கார்களை வாங்கினார் அஜித்கு. இந்த நிலையில், தற்போது மெக்லாரன் சென்னா என்ற காரை வாங்கி இருக்கிறார். இந்த கார் அஜித்தின் ரோல் மாடலான அயர்டன் சென்னாவின் நினைவாக உருவாக்கப்பட்டது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை உலக அளவில் 500 பேர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அந்த பட்டியலில் தற்போது அஜித் குமாரும் இணைந்துள்ளார். அஜித்தின் ரோல் மாடலான இந்த அயர்டன் சென்னா கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். சமீபத்தில் அவரது சிலையை பார்வையிட்ட அஜித், அவரது கால்களில் முத்தமிட்ட வீடியோவும் வெளியானது. இந்நிலையில் தற்போது மெக்லாரன் சென்னா காரை அஜித் பார்வையிடும் வீடியோவை வெளியாகி வைரலானது.