தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து அவர் தனுஷ் நடித்த வாத்தி மற்றும் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கும் நிலையில், ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், இன்று பழனி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார் சூர்யா. அவருடன் வெங்கி அட்லூரியும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். கூடவே படத்தின் கதை அடங்கிய டாக்குமென்ட்டையும் வைத்து பூஜை செய்தனர். அது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.