என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை 2025 சங்கராந்தி தினத்தில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.
“படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதை விட சங்கராந்தி தினத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், சிரஞ்சீவி சாரின் 'விஷ்வம்பரா' படத்தையும் ஷங்கராந்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக 'கேம் சேஞ்சர்' படத்தை எடுத்து வருவது குறித்து சிரஞ்சீவியிடமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும் பேசினோம். அவர்களது படமும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். இருந்தாலும் எங்களுக்காக அப்படத்தை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் தில் ராஜு.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா, “டபுள் ஷங்கர்-ஆந்தி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.