தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ரவி தேஜாவை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை ரவி தேஜாவிற்கு பிடித்துள்ளதால் விரைவில் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என தெரிகிறது. சுந்தர். சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவடைந்த பிறகு ரவி தேஜா படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.