அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

புதுடில்லி : மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ் மற்றும் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு டில்லியில் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆக., 16ல் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வானது. அதோடு இந்த படத்திற்கு சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் 70 தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று(அக்., 8) நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழில் இருந்து தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் (பொன்னியின் செல்வன் 1), இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), ஏஆர் ரஹ்மான் (பின்னணி இசை), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்), ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1), அன்பறிவு (கேஜிஎப்) உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

தாதா சாகேப் விருது

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர் பாடல் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜானிக்கு நோ விருது
திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடனத்திற்கு சதீஷ் கிருஷ்ணன் உடன் இணைந்து ஜானி மாஸ்டருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் அவர் கைதானதால் அவருக்கான விருது இருதினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.