ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜீவா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் அக்டோபர் 11ம் தேதி வெளியாக உள்ள படம் 'பிளாக்'. இப்படத்தின் டிரைலர் பத்து தினங்களுக்கு முன்பே வெளிவந்தது. அப்போதே இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
'கோஹெரன்ட்' படத்தின் காப்பி என்று சிலரும், 'விவாரியம்' படத்தின் காப்பி என்று சிலரும் கூறினர். ஆனால், 'விவாரியம்' படத்தின் டிரைலருக்கும், 'பிளாக்' படத்தின் டிரைலருக்கும் தான் பொருத்தம் அதிகமாக உள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட வில்லா குடியிருப்பு ஒன்றில் முதல் குடும்பமாக நுழையும் கணவன் - மனைவி (?) அங்கு சந்திக்கும் சில மர்மங்கள்தான் 'விவாரியம்' ஹாலிவுட் டிரைலரிலும், 'பிளாக்' டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், “டிரைலர் வந்த உடனே நிறைய கமெண்ட்கள் வந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்கள் எடுத்திருக்கோம். ரீமேக் படங்களை எடுத்ததில்லை. இதுதான் முதல் ரீமேக் படம். ஒரு ஆங்கிலப் படத்தின் ரீமேக்தான், முறையாக ரைட்ஸ் வாங்கி பண்ணியிருக்கோம். எந்தப் படம்கிறது ரிலீஸுக்கு அப்புறம் பேசுவோம்,” என்றார்.
படத்தின் டைட்டிலில் எப்படியும் அது பற்றிய 'அறிவிப்பு கார்டு' இடம் பெறும். அப்போது ரசிகர்கள் இது எந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.