மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தின் போது காதல் ஏற்பட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட அவர்களது காதல், 2022ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சென்னை அருகே உள்ள மகாபாலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்த திருமண நிகழ்வை அப்போதே ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் விற்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. திருமண வீடியோவைக் கூட விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்களே என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த திருமண வீடியோ வெளியீடு குறித்து அதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது விரைவில் வெளியாக உள்ளதாக அவர்களது தளத்தில் அறிவித்துள்ளார்.
'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக அது விரைவில் இடம் பெற உள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் 'வாடகைத் தாய்' மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பெற்றோர் ஆனார்கள். அதுவும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகள் பற்றியும் அப்டேட் செய்து டாகுமென்டரி படம் இருக்குமா அல்லது திருமண நிகழ்வுகள் மட்டும் இருக்குமா என்பது வெளிவந்த பின்புதான் தெரியும்.




