எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தவர் பாட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சின்ன சின்ன படங்களில் பாடல்கள் எழுதி மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த கல்யாண சுந்தரத்தை பற்றி கேள்விப்பட்ட எம்ஜிஆர் அவரை நேரில் அழைத்து பாராட்டி தனக்கு ஒரு பாடல் எழுதி தருமாறு கேட்டு அதற்கான சூழலை சொன்னார். உடனே கல்யாண சுந்தரம் தானே மேஜையில் தாளம் போட்டு மெட்டமைத்து பாடிய பாடல் தான் “சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி..” என்ற பாடல்.
எந்த குறிப்பும், முன் தயாரிப்பும் இன்றி கல்யாண சுந்தரம் பாடியதை கேட்டு அசந்து போன எம்.ஜி.ஆர் அடுத்த நிமிடமே இன்னொரு சூழலை சொல்லி அதற்கொரு பாடல் கேட்டார். அந்த பாடல்தான் “திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே” இரண்டு பாடலுக்கும் எம்ஜிஆர் கொடுத்த சன்மானம் கல்யாண சுந்தரத்தின் ஒரு வருட வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது.
கல்யாண சுந்தரத்தின் பாடல்கள்தான் எம்ஜிஆரின் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பார்கள். இதை எம்ஜிஆரே ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஒருமுறை வானொலி நேர்காணலின்போது “என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” “என்று மனம் திறந்து பாராட்டினார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 65வது நினைவு நாள் இன்று.




