ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

அருண் விசுவல் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி'. அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கி உள்ளார். தெலுங்கு நடிகர் திரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா, ரவி மரியா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருணகிரி இசை அமைத்துள்ளார், விஜயஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. படத்தின் அறிமுக விழா நடந்தது.
இதில் நடிகை இனியா பேசியதாவது: இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல், நான் நடித்த மூன்று படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது. என் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம். ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என்பதுதான் படத்தின் கதை. பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அதனால்தான் ஹீரோவுடன் லிப் லாக் முத்தக்காட்சி உள்பட நெருக்கமான பல காட்சிகளில் நெருடல் இல்லாமல் நடிக்க முடிந்தது” என்றார்.




