தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் தேனியில் சத்தமின்றி துவங்கி நடந்து வருகிறது.
இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் எனும் தயாரிப்பாளர் தனது 'டாவுன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் முதல் படமாக தயாரிக்கின்றார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




