எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? |

தமிழ் சினிமாவில் 50வது ஆண்டைத் தொட உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் வியாபார வட்டத்தை பெரிதாக்கியவர். அவர் கதாநாயகனாக உயர்ந்த பின் அந்தந்த கால கட்டங்களில் பிரபலமாகும் கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக வைத்திருப்பார்.
இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரையில் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏஆர் ரகுமான் என பயணித்தவர் அடுத்து இன்றைய தலைமுறை இசையமைப்பாளரான அனிருத்துடனும் சில படங்களைக் கடந்துவிட்டார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த 'பேட்ட' படம்தான் ரஜினிகாந்த், அனிருத் கூட்டணியின் முதல் படம். அதற்கடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்', நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' ஆகிய படங்களில் அக்கூட்டணி பயணித்தது. அடுத்து 4வது முறையாக தசெ ஞானவேல் இயக்கியுள்ள 'வேட்டையன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. நாளை இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. நாளை வெளியாக உள்ள மற்ற பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில் கடைசியாக வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் அனிருத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அந்தக் குறையை 'வேட்டையன்' படம் போக்கும் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.