அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் |
90ஸ் கிட்ஸ்களின் அபிமான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும், 2 கே கிட்ஸ்களின் அபிமான இசையமைப்பாளராக அனிருத்தும் இருக்கிறார்கள். அனிருத்திடமிருந்து எப்போதுமே அதிரடிப் பாடல்கள்தான் அதிகமாக வெளியாகும்.
அனிருத் இசையமைத்து வரும் 'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் தற்போது வரை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, யூடியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
யுவன் இசையில் கடந்த வாரம் வெளியான 'தி கோட்' படத்தின் 'மட்ட' பாடல் 10 நாட்களுக்கு முன்பு யூடியூப் தளத்தில் வெளியானது. தற்போது வரை அப்பாடல் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, யூடியூப் டிரென்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
'மனசிலாயோ' பாடலுக்கு வரும் நாட்களில் அதிகமான பார்வைகள் கிடைக்கலாம். அதைச் சமாளிக்க 'மட்ட' பாடலின் முழு வீடியோ வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்பாடலில் சிறப்புத் தோற்றத்தில் திரிஷா நடனமாடியுள்ளார். அதன் முழு வீடியோ வெளியாகும் பட்சத்தில் அடுத்த வாரத்திற்கான தியேட்டர் வரவேற்பையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.