'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. நகைச்சுவை நடிகரான சூரியை கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகராக இந்த படம் மாற்றியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போதும் திண்டுக்கல் அருகே உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை வெற்றிமாறன் இந்த இரண்டாம் பாகத்திற்காக எடுத்துள்ள காட்சிகளின் நீளமே நான்கு மணி நேரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது எடுத்து வரும் காட்சிகள் அனைத்தையும் இணைத்து எவ்வளவு கிரிப்பாக படத்தொகுப்பு செய்தாலும் நான்கு மணி நேரத்திற்கு குறைய வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் விடுதலை இரண்டாம் பாகத்தை இரண்டரை மணி நேரம் ஓடும் விதமாக தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் மீதி படத்தை சில நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அனேகமாக படம் வெளியாகும் சமயத்தில் தான் இந்த சஸ்பென்ஸ் அதிகாரப்பூர்வமாக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.