நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
கடந்த சில வருடங்களாகவே பிரபல ஹீரோக்கள் கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பு நடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட நடிகர்களின் பிறந்தநாள் அன்றோ அல்லது அந்த படம் வெளியான நாளை கொண்டாடும் விதமாகவோ இந்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியானாலும் ஒரு சில படங்களே மீண்டும் மிகப்பெரிய வரவேற்பு பெறுகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான போது என்ன வரவேற்பையும் வசூலையும் பெற்றதோ அதற்கு நிகராக இந்த ரீ ரிலீஸ் சமயத்திலும் மிகப்பெரிய அளவில் வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2000ல் வெளியான ‛தேவதூதன்' படம், வெளியான சமயத்தில் பெரிய வரவேற்பை பெற தவறியது. ஆனாலும் தைரியமாக இந்த படம் கடந்த ஜூலை மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளன்றே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கேரளாவில் வயநாடு துயரம், சமீபத்திய ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய சலசலப்பு என அனைத்தையும் தாண்டி இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது. இன்னும் சில திரையரங்குகளில் இந்த படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்த தங்களது மகிழ்ச்சியை படக்குழுவினர் போஸ்டர் மூலமாக சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி உள்ளனர்.