விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! |

கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக வலம் வந்தார்கள். இருவரும் ஒரு புராண படத்திலும் ஜோடியாக நடித்தார்கள். அந்த படம் 'சத்யவான் சாவித்ரி'. ஆனால் இது மலையாள படம். சத்யவானாக கமல்ஹாசனும், சாவித்ரியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தார்கள்.
இவர்களுடன் அடூர் பாசி, சுகுமாறன் நாயர், ஜோஸ் பிரகாஷ், கவியூர் பொன்னம்மா, ஸ்ரீலதா நம்பூதிரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். பி.ஜி.விஸ்வம்பரன் இயக்கி இருந்தார். ராஜகோபால் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார்.
1977ம் ஆண்டு வெளியான இந்த படம், வண்ணத்தில் தயாராகி இருந்தது. தமிழில் 'சத்யவான் சாவித்ரி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சத்யவான்துடு' என்ற பெயரிலும் வெளியானது. மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழ் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை.