ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா வாழ்க்கையை தழுவி அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடணத்தை பற்றி 'எமர்ஜென்சி' என்ற படத்தை தயாரித்து, அதில் இந்திராவாக நடித்துள்ளார். படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 3ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் இந்திராவை பற்றி படம் எடுத்துள்ள கங்கனா, சீக்கியர்களை படத்தில் பயங்கரவாதிகளாக சித்தரித்தால் அவர் தலை துண்டிக்கப்படும் என்று சீக்கிய இளைஞர்கள் சிலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் “இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள். நீங்கள் ஏற்கெனவே அடி வாங்கியிருக்கிறீர்கள். மகாராஷ்டிராவில் உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களை செருப்பால் வரவேற்போம்.
படத்தில் சீக்கியர்களை பயங்கரவாதிகளாக காட்டினால், நீங்கள் யாரை பற்றி படம் எடுக்கிறீர்களோ, அவருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (இந்திராவின் படுகொலை). எங்களை நோக்கி கைகாட்டும் விரல்களை எப்படி உடைக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்களின் தலைகளை தியாகம் செய்ய முடிந்த எங்களுக்கு, அதை எடுக்கவும் முடியும்” என்று அதில் அவர்கள் பேசியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, மகாராஷ்டிரா, இமாச்சல், பஞ்சாப் காவல்துறையினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.




