ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
மலையாள சினிமாவில் புதிது புதிதாக கிளம்பும் பாலியல் குற்றச்சாட்டுகளால் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கையால் பல உண்மைகள் வெளிவந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு கமிட்டியை தங்கள் மாநிலத்திலும் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களிலும் குரல ஒலிக்க தொடங்கி உள்ளது. அந்த வரிசையில் மேற்கு வங்க நடிகை ரிதாபரி சக்ரபோர்த்தி மேற்கு வங்க சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது. இங்கும் ஒரு கமிட்டி நியமித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தும் ஹேமா கமிஷன் அறிக்கை பல விவகாரங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது. வங்காள மொழி திரையுலகம் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று என்னை யோசிக்க வைத்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளவை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அல்லது எனக்குத் தெரிந்த சில நடிகைகள் செய்த அனுபவங்களைப் போன்று உள்ளது. சினிமாவுக்கு கனவுகளுடன் வரும் இளம் நடிகைகள் மீது பொறுப்பு வேண்டும். இனிப்பு பூசப்பட்ட விபசார விடுதிபோல் சினிமாத்துறை ஆகிவிடக்கூடாது.
இதேபோன்ற விசாரணை வங்காள மொழி திரைத்துறையிலும் அமைக்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இங்குள்ள திறைத்துறையிலும் தவறான எண்ணம் கொண்ட ஒருசிலரின் முகத்திரையை கிழிக்க அனைவரும் முன்வரவேண்டும். அழுக்கான மனம் மற்றும் நடத்தை கொண்ட கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் செயல்களுக்கு எந்த விளைவுகளையும் சந்திக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அனுப்பி வைத்துள்ளார். வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா தான் மலையாள சினிமாவில் இந்த புயலை தொடங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.