'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‛இந்திய தின அணிவகுப்பு' ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு பிறகு ஏற்பாடு செய்யப்படும் இந்த அணிவகுப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பல இந்திய பிரபலங்கள் பங்குபெறுவார்கள்.
அதன்படி, இந்தாண்டு நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி பங்கேற்றார். ‛ஸ்ட்ரீ 2' திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த பங்கஜ் திரிபாதி இதில் பங்கேற்க கவுரவ விருந்தினராக அழைக்கப்பட்டார். குடும்பத்துடன் பங்கேற்ற பங்கஜ் திரிபாதி உடன், அணிவகுப்பு முடிந்ததும், ஏராளமான பார்வையாளர்கள், ரசிகர்கள் செல்பி எடுக்க முற்பட்டனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்பி எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக பங்கஜ் திரிபாதி, கூட்டத்தினருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது குறித்து அவர் கூறியதாவது: ஒரு நடிகரின் உண்மையான வெற்றி பார்வையாளர்களின் அன்பு மற்றும் மரியாதையில் உள்ளது என்று நான் எப்போதும் நம்புகிறேன். ரசிகர்களின் அன்புக்கு நான் செய்யும் கடமையாக இதனை உணர்கிறேன். அங்குள்ள மக்களின் அரவணைப்பு மற்றும் பாசத்தால் மூழ்கினேன். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.