போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிக்கு வருவது சர்ச்சையாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புர்கா என்ற படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ளார் மிர்னா. இந்த படத்தில் கலையரசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஐரா, மா மற்றும் பிளட்மணி படங்களை இயக்கிய சர்ஜுன் கே.எம்.இயக்கி உள்ளார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை கதை களமாக கொண்டு படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தற்போது உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில நடக்க இருக்கும் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் திரையிட தேர்வாகி உள்ளது.