பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் |

கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன், மீனா, சவுந்தர்யா உள்ளிட்ட பல நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கு அம்மன் வேடமும் அழகாக பொருந்தும். அந்த வரிசையில் தற்போது பிந்து மாதவியும் நாகா என்ற படத்தில் அம்மன் வேடமணிந்து நடிக்கிறார்.
இதுபற்றிய விபரம் வருமாறு: எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் நாகா. இந்த படத்தில் பிந்து மாதவியும், ரைசா வில்சனும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் படங்களை இயக்கிய சார்லஸ் இயக்குகிறார்.
படம் பற்றி சார்லஸ் கூறியதாவது: நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம், அவதாரமெடுத்து வந்து சம்ஹாரம் செய்து அழித்து ஒழிப்பதே படத்தின் கதை.
பிந்து மாதவி தீயவர்களை அழிக்கும் மானஸா தேவியாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோவில்களில் படமாக்கப்படுகிறது. என்றார்.