பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‛ஆர்ஆர்ஆர்'. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த இந்த படம் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 2023 ஆஸ்கர் போட்டியிலும் நேரடியாக பங்கேற்கிறது. இதுதவிர கோல்டன் குளோப் விருது பிரிவிலும் இரண்டு விருதுகள் பிரிவில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் 'நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்' என்ற குழு 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விழாவில் தனது மனைவி உடன் பங்கேற்றார் ராஜமவுலி.
விழாவில் பேசிய அவர், ‛‛இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி. தென்னிந்தியாவில் இருந்து வந்த சிறிய படத்தை நிறைய பேர் கவனிக்க வைத்துள்ளீர்கள். வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தியேட்டர்களில் பார்வையாளர்களை பார்த்தபோது அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரமிப்பு இருந்தது. தியேட்டர்களில் படம் பார்க்கும் மகிழ்ச்சியையே விரும்புகிறேன்'' என்றார் ராஜமவுலி.