2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே. அம்மணி, ஹவுஸ் ஓனர் படங்களை தொடர்ந்து தற்போது ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு குழந்தையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இளையராஜா இசை அமைக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவில், ‛‛இப்படத்தின் பின்னணி இசைப் பணிகளை இளையராஜா முடித்துவிட்டார். மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுடனும் பணிவுடனும் இருக்கிறேன். அவருடைய ஆர்வம் ஆற்றல் அர்ப்பணிப்பு அற்புதமானது. இளையராஜா என்ற லெஜென்டிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் படத்தை காண்பிப்பதற்கு காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.