சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? |

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 30ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. அதோடு மார்ச் மாதம் முதல் வாரத்தில் பத்துதல படத்தின் இசை விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பத்து தல படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.