பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு படங்களும் ஜன., 11ல் ஒரே நாளில் வெளியாகின்றன. சில தினங்களுக்கு முன் அஜித்தின் துணிவு பட டிரைலர் வெளியானது. 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளையும், 1.1 மில்லியன் லைக்குகளையும் இந்த டிரைலர் பெற்றது. இதற்கு முன்பு வெளியான அஜித் படங்களின் டிரைலரை விட அதிக பார்வைகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இருப்பினும் விஜய்யின் 'பீஸ்ட்' டிரைலர் சாதனையை 'துணிவு' டிரைலரால் முறியடிக்க முடியவில்லை என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் விஜய்யின் ‛வாரிசு' பட டிரைலர் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே அதிகமான பார்வைகளை பெற்று வந்த இந்த டிரைலர் 24 மணிநேரத்தில் 23.5 மில்லியன் பார்வைகளையும், 1.8 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றது. இதன்மூலம் விஜய்யின் பட டிரைலரை அஜித்தின் பட டிரைலர் முந்தி சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #UnbeatableThunivuTrailer என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர்.
தற்போது வரை துணிவு பட டிரைலர் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் விஜய்யின் ‛பீஸ்ட்' பட டிரைலர் 9 மாதங்களில் செய்த 6 கோடி பார்வைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.