சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் இந்த படம் வெளியாகும் முதல் நாளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை நான்கு மணி காட்சி திரையிடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகாலை 4 மணி கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. என்றாலும், கோட் படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த அனுமதி கிடைத்தால் கோட் படத்தின் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படும் என்கிறார்கள். அப்படி இல்லையென்றால் வழக்கம் போல் காலை 9 மணிக்கு தான் இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிகிறது.




