பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் ரோஜா. அதன்பிறகு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது விளையாட்டு துறை அமைச்சரானார். இந்த நிலைக்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. இதில் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜாவும் தோல்வி அடைந்தார்.
இப்படியானநிலையில், விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் ரோஜா இணைய போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் சில தினங்களாகவே வைரலாகி வந்தது. இந்தநிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த ரோஜா அந்த செய்தியை மறுத்துள்ளார்.
மேலும், நான் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கவே விரும்புகிறேன். நான் விஜய் கட்சியில் இணையப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள். ஜெகன் மோகன் கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கும் நான் எதற்காக விஜய் கட்சியில் இணைய வேண்டும் . அதிலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோதே நான் அந்த கட்சியில் இணையவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் கட்சியில் நான் சேர வேண்டும். என்னைப்பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று சொல்லி அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ரோஜா.




