சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் |
சின்னத்திரை பிரபலமான அபிராமி தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிகம் ரீச்சானார். அதன்பிறகு சினிமாவில் முழுநேர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிராமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்த அபிராமி தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜாஸ்மின் ராத் தற்போது விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுடர் கதாபாத்திரத்தில் இனி அபிராமி தான் நடிக்கிறார்.