'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னட திரையுலகில் இருந்து கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகர் யஷ். இவர் தற்போது டாக்ஸிக் என்கிற புதிய படத்தில் நடிக்க வருகிறார். தேசிய விருது பெற்ற இயக்குனரும், நடிகையுமான கீது மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தின் அருகிலேயே நடிகர் சிவராஜ்குமார் நடித்து வரும் அவரது 131வது படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சிவராஜ்குமாரின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரிலேயே சென்ற யஷ் அவருடன் சேர்ந்து நேரம் பேசிவிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு வந்துள்ளார். இப்படி இவர்கள் இருவரும் சந்தித்ததை கேள்விப்பட்ட பலரும் நடிகர் யஷ், சிவராஜ்குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்பது போன்று தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.