கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? |
1975ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‛மயங்குகிறாள் ஒரு மாது'. இதில் முத்துராமன், சுஜாதா, விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் கதை எழுதியிருந்தார்.
கதைப்படி சுஜாதா கல்லூரியில் படிக்கும்போது விஜயகுமாரை காதலிப்பார். ஒரு இரவு அவருடன் தனிமையில் செலவிட்டு விடுவார். ஆனால் பின்னாளில் இதை மறைத்து பெற்றோர்கள் அவருக்கு முத்துராமனை திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.
கெட்டுப்போன தான் ஒரு நல்ல மனிதனுக்கு மனைவியாக வாழ்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி சுஜாதாவை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இதனாலேயே அவர் உடல்நலமுற்று சாகும் நிலைக்கு செல்வார். கடைசியில் கணவனிடம் உண்மையை சொல்லிவிட முடிவு செய்வார். ஆனால் கணவனோ அந்த உண்மை எனக்கு தெரியும். அறியாத பருவத்தில் செய்த தவறுதானே அது என்று பெருந்தன்மையோடு சுஜாதாவை ஏற்றுக் கொள்வார். இதுதான் படத்தின் கதை.
இன்னொரு ஆணுடன் உறவு கொண்ட பெண் எப்படி கணவனுடன் வாழலாம். அதை கணவனும் எப்படி ஏற்றுக் கொள்ளலாம். தவறு செய்த பெண் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதனால் கிளைமாக்சில் சுஜாதாவை கொன்று விடுங்கள். அதாவது உண்மை தெரிந்த முத்துராமன் அவரை கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவரே இறந்து விட வேண்டும் இப்படி மாற்றினால்தான் படத்தை வாங்கி வெளியிடுவோம் என்று அன்றைக்கு இருந்த சில விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மறுத்து விட்டார்கள். ஆனால் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், கதாசிரியர் பஞ்சு அருணாசலமும் இதற்கு மறுத்து விட்டார்கள்.
இதனால் 8 மாதம் வரை வெளிவராமல் இருந்த படத்தை பின்னர் ஒருவழியாக ரிலீஸானது. படம் பெரிய வெற்றி பெற்றது. தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் கிடைத்தது. அடுத்து ரவுண்டு வெளியீட்டை விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வெளியிட்டார்கள்.