இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாள திரையுலகில் முதன்முறையாக 50 கோடி என்கிற வசூல் இலக்கை தொட்ட படம் திரிஷ்யம். இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்த சில வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானாலும் முதல் பாகத்தைப் போலவே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரது கூட்டணியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அதேசமயம் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான நுனக்குழி என்கிற திரைப்படம் வழக்கம் போல ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டி கொடுத்த ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3 பற்றி பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த மூன்றாம் பாகத்தை எப்படி முடிப்பது என்பதை மட்டும் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். அது மோகன்லால் சாருக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. அதே சமயம் இடையில் உள்ள விஷயங்களை நிரப்புவதில் தான் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. முதல் பாகத்தை வெளியிடும்போது இரண்டாம் பாகம் உருவாக்கும் எண்ணமே இல்லை. ஆனால் அதை உருவாக்கலாம் என நினைத்தபின் அதற்காக ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டேன்.
அதேபோலத்தான் மூன்றாம் பாகத்திற்கும் மிகுந்த நேரம் எடுக்கும் என தெரிகிறது. அதே சமயம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பின்னணி பாடகி சித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயத்தில் இருந்து இந்த படத்தின் ஆரம்பத்திற்கான ஒரு ஐடியா எனக்கு கிடைத்து விட்டது. இனி மற்ற இடங்களை நிரப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.