பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வர உள்ள படம் 'வேட்டையன்', கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'தக் லைப்'.
இதில் 'வேட்டையன்' படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று தகவல். இருப்பினும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. பஹத் பாசில், அபிராமி உள்ளிட்ட சிலர் டப்பிங் பேசிய புகைப்படங்களும் வெளிவந்தன. ரஜினிகாந்த்தும் பேசி முடித்துவிட்டார் எனத் தகவல்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'தக் லைப்'. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் நடக்க வேண்டி உள்ளது. இருந்தாலும் படத்தின் டப்பிங் வேலைகளும் ஒருசேர நடந்து வருகின்றன. சிலம்பரசன் அவருடைய டப்பிங்கை பேசி முடித்துவிட்டதாகத் தகவல். தற்போது கமல்ஹாசனும் அவருடைய டப்பிங்கை ஆரம்பித்துள்ளார்.
'வேட்டையன்' படம் அக்டோபர் வெளியீடு என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேதியை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். 'தக் லைப்' படம் இந்த ஆண்டின் கடைசி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம்.