முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

தனுஷ் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ராயன்'. இப்படம் பற்றி கலவையான விமர்சனங்கள்தான் வெளிவந்தன. வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் படத்தைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இப்படம் தமிழகத்தில் சுமார் 70 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படம் குறித்து நடிகர் தனுஷ், “ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள், நண்பர்கள், பத்திரிகை, மீடியா, எனக்கு தூணாக இருக்கும் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் என என் மீது உங்கள் ஆசீர்வாதத்தை வழங்கியதற்கு எனது மதிப்பிற்குரிய நன்றி. எனது பிறந்தநாளுக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பரிசு இது,” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.