பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம் 'புறநானூறு'. ஆனால், அப்படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பரும், 'பிரின்ஸ், மாவீரன்' படங்களின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உறவினர் ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தை முதல் பிரதி அடிப்படையில் தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறாராம் சுதா.
சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றிற்கு முன்பாக சுதா இயக்க உள்ள 'புறநானூறு' படம் ஆரம்பமாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.