பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள கணக்கு ஒன்றில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பெரிய படம் ஒன்றின் வெளியீடு தள்ளிப் போகலாம், விஎப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்று பதிவிட்டிருந்தார்கள். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “இதில் உண்மையில்லை, 24/7 நாங்கள் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். தவறான எதிர்மறையான செய்தியை பரப்பாதீர்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார். உடனே அடுத்த பதிவில், “சாரி, நீங்கள் எங்களை உங்கள் பதிவில் இணைக்கவில்லை, நாங்கள் உலக அளவில் செப்டம்பர் 5ம் தேதி படத்தை வெளியிடுவோம்,” என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் அடுத்த அப்டேட் எப்போது என்று கேட்டதற்கு, ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
வேறு ஏதோ ஒரு படத்தைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் சொன்னதை தங்களது 'தி கோட்' பற்றித்தான் அவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து தெரியாமல் உள்ளே வந்து அப்டேட் கொடுத்துள்ளார் அர்ச்சனா.