வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவிதேஜா. மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், என்.டி.பாலகிருஷ்ணா இவர்களோடு மோதாமல் தனி டிராக்கில் செல்கிறவர். அவர் படங்கள் பெரும்பாலும் வெற்றி அடைந்து விடும். கடந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த வால்டர் வீரய்யா, ராவணசுரா, டைகர் நாகேஷ்வராவ் படங்கள் வந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ஈகிள்' படம் வந்தது.
இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் 'மிஸ்டர் பச்சன்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் 'மிஸ்டர் பச்சன்' படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை ஹரிஸ் சங்கர் இயக்கி உள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சதாகர், ஜெகபதி பாபு ஆகியோ ர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.