தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஒரு அடார் லவ். புருவ அழகி என அப்போது பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமானது இந்த படத்தில் தான். ஓமர் லுலு என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ஓமர் லுலு மீது போலீசில் புகார் அளித்தார். அதே சமயம் அந்தப்பெண்ணும் தானும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாக கூறிய ஓமர் லுலு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் புகார் அளித்த அந்தப்பெண், புகார் குறித்து முக்கியமான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இயக்குனர் ஓமர் லுலுவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் அந்த ஆதாரங்களை சேதப்படுத்தி விடக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்துள்ளது.