சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரகனி. இருவருமே கே.பாலச்சந்தரின் சீடர்கள். இந்தியன் 2வில் நடித்தது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
கமல்ஹாசன் சாருக்கு நான் பெரிய ரசிகன். நான் ஆபரேட்டராக இருந்தபோது வாழ்வே மாயம் படத்தைத்தான் அதிகமுறை ஓட்டியிருக்கிறேன். அன்பே சிவம், ஹே ராம் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்தியன் படத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகவாவது நடிக்க விரும்பி சென்றேன். ஆனால் அன்றைக்கு புறந்தள்ளப்பட்டேன். இதை மனதில் வைத்து எனக்காகவே இந்தியன் 2வில் எனது கேரக்டரை ஷங்கர் சார் எழுதியதாக கேள்விப்பட்டேன்.
கமல் சாரை இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் அது இருந்தது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நாவலை அவரை வைத்து இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நாவலில் வரும் ‛மொக்கை நாயக்கர்' கேரக்டரில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கமல் சார் ஆபீசுக்கு சென்ற அந்த நாவலை கொடுத்துவிட்டு எனது ஆசையையும் சொல்லிவிட்டு வந்தேன். அதன்பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வராததால் நானும் விட்டுவிட்டேன்.
இவ்வாறு சமுத்திரகனி கூறியுள்ளார்.