'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இப்போது இசை அமைப்பாளர்கள் நடிகராகும் காலம். ஆனால் 1980களிலேயே இசை அமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் (சங்கர்) - கணேஷ். 'ஒத்தயடி பாதையிலே' என்ற படத்தில் நாயகனாக அறிமுமானார். இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம் தயாரித்தார். பவுர்ணமி என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர்களுடன் ஜக்கு, மாயா, நளினி, ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக “செப்புகுடம் தூக்கிட்டு...” இன்றளவும் ரசிக்கப்படுகிற கிராமிய பாடலாக இருக்கிறது. ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் வெளிவந்த 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் சாயலில் இந்த படம் வந்ததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. படம் தோல்வி அடைந்ததால் கணேஷ் அதன்பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் அதையும் கைவிட்டார். படத்தில் அறிமுகமான ஹீரோயின் பவுர்ணமி அதன்பிறகு வேறு படங்களிலும் நடிக்கவில்லை.