சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிவிதம் படம் வெளியானது. பல வருட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்தில் இசையமைத்த படம் என்கிற பெருமையுடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் படும் கஷ்டங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்பட பட்டியலிலும் இடம் பிடித்தது.
ஆனால் சோதனையாக இந்த படத்தின் ஓடிடி வெளியீடு பல காரணங்களால் தாமதமாகி கொண்டே வந்தது. குறிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்க, ஓடிடி நிறுவனங்கள் அந்த அளவிற்கு விலை கொடுக்க தயங்கி ஓதுங்கி நின்றதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நிலைமை சமூகமாகி நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 19ம் தேதி முதல் இந்த படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் சேர்த்து ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.




