தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் |

சிறுவர்களை மையமாக வைத்து பார்த்திபன் இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்துள்ள ‛டீன்ஸ்' படம் நேற்று முன்தினம் (ஜூலை 12) திரைக்கு வந்தது. யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரில்லர் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியாகி உள்ள இந்த படத்திற்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபற்றி எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி உடன் ஒரு பதிவு போட்டுள்ளார் பார்த்திபன்.
அதில், ‛‛நண்பர்களே... சத்தியமா சொல்றேன் TEENZ-க்கு(டீன்ஸ்) உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த, உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் 'ஓ'ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு சயின்ஸ் பிக்ஷன் மற்றும் பேண்டஸி எண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும், கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்''.
நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




