ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மாவீரன்'. இந்த படம் வெளியாகி ஓராண்டாகிறது. இதுபற்றி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு : எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ‛மாவீரன்'-ம் ஒன்று. மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா பட டிரைலரை வெளியிடும்படி தயாரிப்பாளர் அருண் விஸ்வா கேட்டுக் கொண்டார். நானும் வெளியிட்டு அந்த டிரைலரை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். சுவாரஸ்யமான மனிதராக இருக்கிறாரே என அருணிடம் சொன்னேன்.
மடோன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஏதாவது படம் பற்றிய ஐடியா இருக்கா என கேட்டேன். மாவீரன் பட கதையை சொன்னார். எந்த சமரசமும் இன்றி உங்கள் வழியில் இந்த படத்தை நீங்கள் எடுங்கள் நான் ஒத்துழைக்கிறேன் என்றேன். விஸ்வா படம் தயாரித்தார். படத்திற்கு உயிர் கொடுக்க நிறைய கலைஞர்கள் உழைத்தார்கள். ஓராண்டு ஆன பிறகும் இந்தப் படத்தை இன்னும் கொண்டாடுகிறார்கள். இதற்கான முழு பாராட்டும் மடோன் மற்றும் அருணையே சேரும். படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.