ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண். 'உய்யாலா ஜம்பால' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். தற்போது திரகம்பர சாமி, பாலே உன்னாலே படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கும் ராஜ் தருண் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ராஜ் தருண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.