மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகை சமந்தா தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்கிறார். உடல் ஆரோக்கியம் பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். இருதினங்களுக்கு முன் சுவாச பிரச்னை தொற்றுக்கு சிகிச்சையாக ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசராக பயன்படுத்துவது பற்றி பதிவிட்டு இருந்தார்.
இதற்கு டாக்டர் சிரியாக் ஏபி பிலிப்ஸ் என்பவர் கண்டனம் தெரிவித்து, சமந்தாவை விமர்சித்து இருந்தார். மேலும், ஆரோக்கியம் மற்றும் மருத்துவ கல்வியறிவு இல்லாமல் அவர் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் இதை பயன்படுத்த சொல்லி அறிவுறுத்தும் சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது சிறையில் அடைக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சமந்தா, ‛‛நல்ல எண்ணத்தில் தான் நான் அதை பரிந்துரை செய்தேன். இந்த சிகிச்சையை எனக்கு பரிந்துரை செய்தவரும் ஒரு டாக்டர் தான். ஒரு ஜென்டில்மேன் எனது பதிவை தாக்கி பதிவிட்டுள்ளார். அவர் ஒரு டாக்டர் என்பதால் நிச்சயம் மருத்துவம் தொடர்பாக அவருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். அதேசமயம் அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக உள்ளன. குறிப்பாக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதை நான் பெரிதாக எடுக்கவில்லை. காரணம் நான் ஒரு பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. என்னை வைத்து அவர் விமர்சிப்பதற்கு பதிலாக எனது மருத்துவருடன் நேருக்கு நேர் அவர் உரையாற்றுவது பொருத்தமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.