பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

பிரபாஸ்,
தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த
வாரம் வெளியான தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் 700 கோடியைத்
தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.
படத்தில் பிரபாஸுக்கு அதிக
முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. பிரபாஸ் ரசிகர்கள் பலரும்
வருத்தப்பட்டனர். அமிதாப்புக்குத்தான் காட்சிகள் அதிகம் என்ற
விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் படத்தின் இயக்குனர், “இரண்டாம்
பாகத்தில் பிரபாஸுக்கான காட்சிகள் அதிகம் இருக்கும். முதல் பாகத்தில்
கதையையும், கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தவே சரியாக இருந்தது.
இரண்டாம் பாகத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. முதல் பாகத்தில் 40
சதவீதக் கதை இடம் பெற்றுவிட்டது. மீதமுள்ள 60 சதவீதக் கதை இரண்டாம்
பாகத்தில் வரும்.
இப்படத்தை எடுக்க 'மாயாபஜார்' படம்தான்
இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அந்தப் படம் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து,
கற்பனைக் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட ஒரு படம்.
இரண்டாம் பாகத்தில் யார் யார் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
முதல்
பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்ததாகச் சொன்னார்கள். படத்திற்கான அறிமுகத்தை
ஏற்படுத்தியதால் அப்படி நடந்தது. அந்த புகாரை புரிந்து கொண்டுள்ளேன்,”
என்றும் கூறியிருக்கிறார்.