பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் மூன்று மணி நேரம் ஓடப் போகிறது. நேற்று வெளியான தணிக்கை சான்றிதழ் மூலம் இது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் அதிக நேரம் ஓடக் கூடிய படமாக இந்தப் படம் இருக்கப் போகிறது.
கமல் நடித்து தமிழில் வெளிவந்த 'விக்ரம்' படம் 2 மணி நேரம் 54 நிமிடம் ஓடிய படமாக இருந்தது. தற்போதெல்லாம் மூன்று மணி நேரப் படம் என்றாலே ரசிகர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்.
ஷங்கர் படம் என்பதால் பிரம்மாண்டம் இருக்கும், விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும் என்பதால் அவ்வளவு நேரம் படம் என்பதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதேசமயம் மேலே குறிப்பிட்டவை இல்லாமல் போனால் அதுவே படத்திற்கு மைனஸ் ஆகவும் அமைய வாய்ப்புள்ளது.