மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.
இந்நிலையில் இந்த படத்திற்கு பாஸ் என்று டைட்டில் வைக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த வேலைக்காரன், மாவீரன் போன்ற டைட்டில்களில் நடித்த சிவகார்த்திகேயன், இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் தி பாஸ் என்று போடப்பட்ட கேப்ஷனில் இடம் பெற்ற பாஸ் என்ற வார்த்தையை இந்த படத்திற்கு தலைப்பாக வைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




