உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை ஜூலை 5 முதல் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு சுமார் பத்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.
இந்த 'கூலி' படத்தில் நடிப்பதற்காகவே 'வேட்டையன்' படத்தில் தான் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கச் சொன்னார் ரஜினிகாந்த். அதன்பின் அபுதாபி, இமயமலை என சில வாரங்கள் ஓய்வில் இருந்தார். பின் 'கூலி' படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிலும் அவர் கலந்து கொண்டார்.
'கூலி' படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரஜினி, சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன், பஹத் பாசில், ஷோபனா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
வரும் வாரங்களில் இப்படத்தின் மேலும் சில அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.