தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையில் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் என்பவரை காதலித்து திருமணம் செய்கிறார். மும்பையில் கடந்த மார்ச் மாதம், நிச்சயதார்த்த விழா நடந்தது. திருமணம் வெளிநாட்டில் நடக்கிறது. இதற்கிடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்று வழங்கி வாழ்த்தினார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தார்.
மத்திய அமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், நாசர், நெப்போலியன், பிரபுதேவா, ஆர்யா, சித்தார்த், ஜீவா, அரவிந்தசாமி, கவுதம் கார்த்திக், மோகன்பாபு, சுதீப், ஜாக்கி ஷெராப், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், அல்லு அரவிந்த், நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, சுகன்யா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், ரோஜா, சுஹாசினி, சீதா, ரெஜினா, லதா, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, தமன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகரன், மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், பி வாசு, பாலா, சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, சேரன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.வெங்கடேஷ், ஏ.எல் விஜய், அட்லி, வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆர்பி சவுத்ரி, ஏஎம் ரத்னம், ஐசரி கணேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
சங்கீத் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சரத்குமாரும், முதல் மனைவி சாயாவும், இரண்டாவது மனைவி ராதிகாவும் வரவேற்றார்கள்.