டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! |
கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதுல்யா ரவி. 'காதல் கண்கட்டுதே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சுட்டுபிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எண்ணி துணிக, வட்டம், காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுல்யா கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. சம்பளம் தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட்டை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.