'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.